முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?

திங்கட்கிழமை, 29 டிசம்பர் 2025      விளையாட்டு
Shreyas-Iyer-2025-12-29

புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விலாப்பகுதியில் அடி...

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

தீவிர சிகிச்சை பிரிவில்...

'ஸ்கேன்' பரிசோதனை மேற்கொண்ட போது, விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் அய்யர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். உடனடியாக ரத்தக்கசிவை தடுப்பதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

விளையாட உள்ளார்... 

அதனை தொடர்ந்து தான் நலமாக இருப்பதாகவும் தனது நலனுக்காக வேண்டிய அனைவருக்கும் நன்றி என ஷ்ரேயாஸ் அய்யர் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் ஓய்வில் இருந்தார். இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை அவர் தவறவிட்டார். இந்த நிலையில், அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளார். அதற்கு முன் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹாசரே கோப்பை தொடரில் விளையாட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து