Idhayam Matrimony

அதிபர் புதின் வீட்டின் மீதான தாக்குதலுக்கு மோடி வருத்தம் பகையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 30 டிசம்பர் 2025      இந்தியா
modi

புதுடெல்லி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் வீட்டைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினின் விட்டைக் குறிவைத்து, உக்ரைன் ராணுவம் 91 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அரசு நிராகரித்துள்ளது. இருப்பினும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்தப் பரபரப்பு குற்றச்சாட்டுகளுக்கு உலகின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தாக்குதலில் ரஷ்ய அதிபர் புதினின் வீடு குறிவைக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வருத்தமளிக்கின்றன என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் அந்தப் பதிவில் கூறியதாவது: ரஷ்ய அதிபரின் வீடு குறிவைக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். பகையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் சம்பந்தப்பட்ட அனைவரும் கவனம் செலுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து