எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெயப்பூர், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் மகனான ரைஹான் வதேராவிற்கும், டெல்லியைச் சேர்ந்த அவிவா பேக் என்ற பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
7 ஆண்டுகளாக இருவரும் பழகி வந்தநிலையில் இரு குடும்பத்தினர் முன்னிலையில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் ரைஹான். அதனை அவிவா ஏற்றுக்கொண்ட நிலையில் இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று ராஜஸ்தானின் ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவிவா பேக் டெல்லியை சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞர் ஆவார். புகைப்பட ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். அவிவா பேக் மற்றும் அவரது குடும்பத்தினர் டெல்லியில் வசிக்கின்றனர். அவரது தந்தை இம்ரான் பெக் ஒரு தொழிலதிபர். ரைஹான் வதேராவும் ஒரு புகைப்பட கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


