எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி, காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பிப்ரவரி மாதமே தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது. மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கலாம். நல்ல தேர்தல் அனுபவம் உள்ள இண்டியா கூட்டணியே வெல்லும். ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி குறித்து தி.மு.க., காங்கிரஸ் தலைவர்கள் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.
தி.மு.க. உடன் காங்கிரஸ் குழுவினர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள். எத்தனை தொகுதிகள் என்பதை தி.மு.க. - காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும்.சில அறிவுஜீவிகள் உத்தரபிரதேசத்துடன் தமிழகத்தை ஒப்பிடுவது சரியல்ல. மெத்தப்படித்தவர்களுடன் விவாதிக்க நான் விரும்பவில்லை.
தேர்தலுக்கு முன் காரைக்குடியில் வேளாண் பல்கலை, சட்டக்கல்லூரி திறக்கப்படும். இந்தியாவிலேயே தமிழகம்தான் வளர்ச்சியில் முதலிடம் என நிதி ஆயோக் கூறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் விஜய் உடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துமா என்ற கேள்விக்கு பா.சிதம்பரம் தெரிவிக்கையில், விஜய்க்கு வாழ்த்துகள், அவரது முயற்சி வெற்றி பெறாது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


