எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்(எஸ்.ஐ.ஆர்.) பணிகள் முடிவடைந்து கடந்த டிச. 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில், எஸ்.ஐ.ஆருக்கு முன்பு தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளில் மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணி வருகிற ஜன. 18 வரை நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 7,37,807 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து 9,535 பேரை நீக்க விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 12.43 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


