Idhayam Matrimony

வெனிசுவேலா அதிபர் மதுரோவை சிறைப்பிடித்த அமெரிக்க ராணுவம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

சனிக்கிழமை, 3 ஜனவரி 2026      உலகம்
Venezula-President-2026-01-

நியூயார்க், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெனிசுவேலா நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தியதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்தநிலையில், வெனிசுவேலா மீது அமெரிக்க படை தாக்குதல் நடத்தியது. மேலும், வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

போதைப் பொருள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக வெனிசுவேலா அரசுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து வெனிசுவேலா செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியதுடன், மதுரோ கடுமையாக விளையாடினால், அதுதான் கடைசி விளையாட்டாக இருக்கும் என்று கிறிஸ்துமஸ் தினத்தன்று ட்ரம்ப் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து