எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெஹ்ரான், ஈரானின் உள்விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதியதாகவும், கற்களை வீசியதாகவும், வாகனங்களை எரித்ததாகவும் உள்ளூர் ஊடங்களில் செய்தி வெளியாகி வருகிறது. சிலர் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பல்வேறு நபர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமைதியான போராட்டங்களுக்கு எதிராக ஈரான் அரசு வன்முறையை பயன்படுத்தினால், அமெரிக்க அரசு களத்தில் இறங்கி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ட்ரம்பின் இந்த கருத்துக்கு ஈரான் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி கூறுகையில், “ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டால், அது பிராந்திய அளவில் குழப்பத்தை விளைவிக்கும். அமெரிக்க நலன்கள் சிதைக்கப்படும். ட்ரம்ப் ஆபத்தான விளையாட்டை தொடங்கியுள்ளார். அமெரிக்க மக்கள் தங்கள் வீரர்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என சாடினார். ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் கூறுகையில், “அமெரிக்காவின் அனைத்து ராணுவ தளங்களும் எங்கள் இலக்குகளாக மாறும்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர்பதற்றம் உருவாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


