Idhayam Matrimony

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு

சனிக்கிழமை, 3 ஜனவரி 2026      தமிழகம்
ADMK

சென்னை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை மேற்கொண்டது. தேர்தல் அறிக்கை தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்க குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெறத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டது.

முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மாணவர்களிடையே கருத்து கேட்க குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து