Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பை தொடர்: தென் ஆப்பிரிக்க, ஜிம்பாப்வே நமீபியா அணிகள் அறிவிப்பு

சனிக்கிழமை, 3 ஜனவரி 2026      விளையாட்டு
T-20-2026-01-03

கேப்டவுன், டி-20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

20 அணிகள் போட்டி...

10-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி  பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம்  தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், டி-20 உலகக் கோப்பை தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிகந்தர் ராசா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணி:

சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரேம் க்ரீமர், பிராட்லி எவன்ஸ், கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, ப்ளெஸிங் முசரபானி, டியான் மையர்ஸ், ரிச்சர்டன் மையர்ஸ்,பிரெண்டன் டெய்லர். 

தென் ஆப்பிரிக்கா அணி:

இதற்கிடையே  டி-20 உலகக் கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , ரிக்கல்டன் அணியில் இடம் பெறவில்லை. மார்க்ராம் (கேப்டன்), போஷ், டெவால்ட் பிரீவிஸ், டி காக், டோனி டி சோர்ஜி, டனவன் பெரேரா, மார்கோ ஜான்சன், லிண்டே, மஹாராஜ், மபாகா, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, ஆன்ரிச் நார்ட்ஜே, ரபாடா, ஜேசன் ஸ்மித்.

நமீபியா அணி அறிவிப்பு...

டி-20 உலகக் கோப்பைத் தொடருக்கான நமீபியா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட அணியை ஜெர்ஹார்டு எராஸ்மஸ் கேப்டனாக வழிநடத்துகிறார். ஜெர்ஹார்டு எராஸ்மஸ் (கேப்டன்), ஸேன் கிரீன், பெர்னார்டு ஷால்ட்ஸ், ரூபென், ஜேஜே ஸ்மித், ஜேன் ஃபிரைலிங்க், லோரென் ஸ்டீன்கம்ப், மலன் க்ரூகர், நிக்கோல் லாஃப்டி ஈட்டன், ஜேக் பிரஸ்ஸெல், பென் ஷிக்காங்கோ, ஜேசி பால்ட், டைலான் லெய்ச்சர், டபிள்யூபி மைபர்க், மாக்ஸ் ஹெனிங்கோ. டி-20 உலகக் கோப்பைத் தொடரில் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் நமீபியா, நெதர்லாந்தை எதிர்த்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து