Idhayam Matrimony

பொய் வாக்குறுதிகளால் தமிழ்நாடு மக்கள் சலிப்பு: தமிழில் பதிவிட்ட அமித் ஷா

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2026      இந்தியா
amitsha

புதுடெல்லி, தி.மு.க. அரசின் பொய் வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழக மக்கள் தி.மு.க. அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, பல லட்சக்கணக்கான மக்களை இப்பேரணி இணைக்கிறது. அதன் நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துடிப்பான நிர்வாகிகளுடன் உரையாற்றவுள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அந்தமானிலிருந்து தனிவிமானத்தில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார். பிறகு ஹெலிகாப்டா் மூலம் புதுக்கோட்டைக்குச் செல்லும் அவா், திருச்சி சாலையில் உள்ள பாலன் நகா் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து