Idhayam Matrimony

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,000 கன அடியாக அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2026      தமிழகம்
Okanagal 2023 08 18

தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

இரு மாநில காவிரி கரையோரம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை முற்றிலுமாக குறைந்தது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவுகளும் அண்மை காலங்களாக குறைக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,200 கன அடியாகக் குறைந்தது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 2,000 கன அடியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. திடீர் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக, ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து