Idhayam Matrimony

வெனிசுலா விவகாரம்: போப் லியோ வேண்டுகோள்

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2026      உலகம்

வாடிகன் சிட்டி, வெனிசுலா நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரோம் நகரின் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்களிடையே போப் லியோ உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெனிசுலாவில் அமைதி திரும்பவும், அந்நாட்டின் தன்னாட்சி அதிகாரம் பாதுகாக்கப்பட வேண்டும். புவிசார் அரசியல் நிலைகளைவிட வெனிசுலா மக்களின் நலன் அனைத்தையும் விட மேலானதாக இருக்க வேண்டும். வன்முறையை கைவிட்டு விட்டு நாடு அமைதி மற்றும் நீதியில் பயணிக்க வேண்டும். இந்த நெருக்கடியால் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான மற்றும் சட்ட ரீதியான பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து