Idhayam Matrimony

ரயில் டிக்கெட் முன்பதிவில் ஐ.ஆர்.சி.டி.சி.யின் நடைமுறை வரும் 12-ம் தேதி முதல் அமல்

செவ்வாய்க்கிழமை, 6 ஜனவரி 2026      தமிழகம்
Train 2023-04-06

சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்க, பயணிகள் தங்களின் ஐ.ஆர்.சி.டி.சி. கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. ஆதார் எண் இணைக்காவிட்டால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாளிலேயே முன்பதிவு டிக்கெட் எடுக்கவும் ஆதார் அவசியம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

அதாவது, கடந்த மாதம் 29-ம் தேதி முதல் கடந்த 4-ம் தேதி வரை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நேரம் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதிக்குப் பிறகு ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், கவுண்டர்களில் டிக்கெட் எடுப்பதில் எந்த வித மாற்றங்களும் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து