எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்துக்கான 8 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர், திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
1. முதலாவது அறிவிப்பு - திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில், சாலை, தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் 14 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
2. இரண்டாவது அறிவிப்பு - திண்டுக்கல் மாநகராட்சியில், இப்போது இருக்கும் பழைய பாதாள சாக்கடை மற்றும் சுத்திகரிப்பு நிலையம் 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
3. மூன்றாவது அறிவிப்பு - பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் புனித தீர்த்தங்களான இடும்பன்குளம் மற்றும் சண்முகா நதி 6 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
4. நான்காவது அறிவிப்பு - புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் நத்தம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 18 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.
5. ஐந்தாவது அறிவிப்பு - அதிக அளவில் முருங்கை பயிரிடப்படும் ஒட்டன்சத்திரத்திற்கு அருகில் இருக்கும் மார்க்கம்பட்டியில் உலகத் தரத்திலான முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
6. ஆறாவது அறிவிப்பு - கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக 100 ஏக்கர் பரப்பளவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த “சுற்றுலா முதலீட்டு பூங்கா” கொடைக்கானல் வட்டம், வில்பட்டி ஊராட்சியில் சிப்காட் மூலமாக அமைக்கப்படும்.
7. ஏழாவது அறிவிப்பு - கண்வலிக் கிழங்கு உற்பத்தியில், நம்முடைய நாட்டிலேயே தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது. பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படும் இந்த பயிருக்கு நிலையான, நியாயமான விலை கிடைப்பதற்கு சம்பந்தப்பட்ட மத்திய அரசுத் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
8. எட்டாவது அறிவிப்பு – ஒட்டன்சத்திரம் நகராட்சியில், அதிகமான குடியிருப்புகள் உள்ள பகுதிகளில், 17 கோடி ரூபாய் செலவில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


