எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கீழ் நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாவட்ட அளவிலான அனைத்து கோர்ட்டுகளிலும், அனைத்து வகையான வழக்குகளையும் இ-பைலிங் முறையில்தான் தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மாநிலம் முழுவதும் வக்கீல்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நடைமுறை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சங்கங்கள் சார்பில் வழக்குகளும் தொடரப்பட்டு, விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கீழ் நீதிமன்றங்களில் இ - பைலிங் முறையை கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது.
ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘கீழ் கோர்ட்டுகளில் இ-பைலிங் முறையில் மட்டுமே வழக்குகளை தாக்கல் செய்யவேண்டும் என்ற நடைமுறையை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இ-பைலிங் நடைமுறை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


