Idhayam Matrimony

சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

வியாழக்கிழமை, 8 ஜனவரி 2026      தமிழகம்
Mdu-High-Court 2023-04-06

மதுரை, சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய  வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிக முக்கியத்துவம் பெறும். இதற்காக காளைகள் பல மாதங்களுக்கு முன்பே அவற்றை வளர்ப்பவர்களாக போட்டிக்காக சிறப்பாக தயார் செய்யப்படும். இந்நிலையில், சிவகங்கையில் அரசு நிர்ணயித்த விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல், அனுமதிக்கப்படாத இடங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது என கூறப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுபற்றி அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி கோர்ட்டும் கேட்டிருந்தது.

இந்நிலையில், அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த சூழலில், சிவகங்கை மாவட்டத்தில் அரசால் அனுமதிக்கப்படாத இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கில், சிவகங்கை மாவட்டத்தில் 45 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்ட 45 இடங்கள் எவை என அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு, சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து