எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி கரூரில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தினார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் 41 பேர் பலியானார்கள். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் 2025-ம் ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய கோர சம்பவமாகும். இந்த சம்பவம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
கரூரில் முகாமிட்டு விசாரணை தொடங்கிய சி.பி.ஐ. குழுவினர் அங்குள்ளவர்களிடமும், த.வெ.க. நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தினர். போலீஸ் அதிகாரிகளிடம் நடந்த சம்பவத்தை கேட்டு பதிவு செய்தனர். இதற்கிடையே, அடுத்த கட்ட விசாரணைக்காக த.வெ.க. நிர்வாகிகள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் கடந்த 29-ஆம் தேதி ஆஜரானார்கள். அதேபோல், கரூர் கலெக்டர் தங்கவேலு, போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானார்கள்.
முதல் நாளில் த.வெ.க. நிர்வாகிகளிடம் 9 மணி நேரமும், 2-வது நாளில் 7 மணி நேரமும் விசாரணை நடந்தது. மூன்றாவது நாளில், அதாவது 31-ஆம் தேதி, சுமார் 3 மணி நேரமும் விசாரணை நடைபெற்றது. இந்த 3 நாட்கள் விசாரணையிலும் த.வெ.க. நிர்வாகிகளிடம் கரூர் கொடூர சம்பவம் குறித்த நிகழ்வுகள் குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விஜய்யிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், கடந்த 6-ம் தேதி சி.பி.ஐ. தரப்பில் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. வரும் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுமாறு சி.பி.ஐ. சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சி.பி.ஐ.-யின் சம்மனை ஏற்று விஜய் வரும் 12-ம் தேதி சி.பி.ஐ. முன் ஆஜராக உள்ளார். இதற்காக விஜய் வருகிற 11-ம் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யிடம் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


