முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'

சனிக்கிழமை, 10 ஜனவரி 2026      தமிழகம்
Pramalatha 2023-07-24

சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த நிமிடம் வரை யாரும் கூட்டணியை அறிவிக்கவில்லை. நாம் ஏன் முந்திரிக் கொட்டைப் போல் அவசரப்பட வேண்டும் என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அக்கட்சி சந்திக்க இருக்கும் முதல் சட்டசபை தேர்தல். தளர்ச்சியில் இருக்கும் தே.மு.தி.க.வை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய பொறுப்பு பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு இருக்கிறது. குறிப்பாக, தேர்தல் சமயத்தில் கூட்டணி முடிவை சரியாக எடுக்க வேண்டும் என்பதில் அவர் எச்சரிக்கையாக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், கடலூரில் நேற்று முன்தினம் தே.மு.தி.க. மாநாடு நடைபெற்றது. ஏற்கனவே, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்ததால், முடிவு என்ன? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த நிமிடம் வரை யாரும் கூட்டணியை அறிவிக்கவில்லை. நாம் ஏன் முந்திரிக் கொட்டைப் போல் அவசரப்பட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று 'சஸ்பென்ஸ்' வைத்து பேசினார்.பிரேமலதா விஜயகாந்தின் இந்த அறிவிப்பால், தே.மு.தி.க. தொண்டர்களிடம் மட்டுமல்ல, தமிழக மக்கள் மத்தியிலும் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தே.மு.தி.க. வட்டாரத்தில் விசாரித்தபோது, அதி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க தே.மு.தி.க. முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. "2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் வழங்கப்பட்டன. எனவே, அதே தொகுதிகளை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதி.மு.க. தரப்பிலோ, அன்று கட்சியில் இருந்தவர்கள் பலர் இன்றைக்கு இல்லை. வாக்கு சதவீதமும் பழைய நிலையில் இல்லை. எனவே, 8 முதல் 10 தொகுதிகள் வேண்டுமானால் தரலாம்" என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து