Idhayam Matrimony

சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து

செவ்வாய்க்கிழமை, 13 ஜனவரி 2026      தமிழகம்
CM-3-2026-01-13

சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ. நிறுவனத்தோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது:- உலகமே ஏ.ஐ. நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஏ.ஐ.யால் வேலை வாய்ப்புக்கு பாதிப்பு இல்லாமல், விழிப்புணர்வு வேண்டும். தமிழ்நாட்டில் ரூ.10,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு உயர்தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில், சர்வம் ஏ.ஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழ்நாட்டின் தரவுகளைத் தமிழ்நாடே வைத்துக் கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்ல இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்குப் பெரிய தரவு மையம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து திட்டப் பயன்கள் குறித்து அமைச்சர் டிஆர்.பி. ராஜா மற்றும் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து