Idhayam Matrimony

மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதி தமிழக கவர்னருக்கு இல்லை: அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2026      தமிழகம்
Kovi-Chezhian 2024-11-09

சென்னை, கவர்னர் ஆர்.என். ரவிக்கு, மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதியில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் கோவி. செழியன், கவர்னர் பங்கேற்கும் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்ததாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இந்த ஆண்டு முதல் நாளில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார். மேலும் தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து, நேற்று நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பங்கேற்கவில்லை. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும் கவர்னர் ஆர்.என். ரவி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை கெடுக்கும் வகையிலும் தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரான செயலில் ஆர்.என். ரவி தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

உயர்கல்வியில் உயர்ந்து நிற்கும் நேரத்தில் பொய்யைப் பரப்புவதுடன் தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் திறமையையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் கவர்னர் ஆர்.என். ரவிக்கு, மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதியில்லை என்றும் கவர்னர் பங்கேற்கும் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து