Idhayam Matrimony

ஜனநாயகத்தின் உணர்வை மதிக்க வேண்டும்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2026      இந்தியா
Modi 2023 07 30

புதுடெல்லி, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நமது ஜனநாயகத்தின் உணர்வை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தேசிய வாக்காளர் தின வாழ்த்துக்கள். இந்த நாள் நமது நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான நமது நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவதாகும். நமது ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்காக இந்திய தேர்தல் ஆணையத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

வாக்காளராக இருப்பது என்பது அரசியலமைப்புச் சலுகை மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் குரல் கொடுக்கும் ஒரு முக்கியமான கடமையாகும். ஜனநாயக செயல்முறைகளில் எப்போதும் பங்கேற்பதன் மூலம் நமது ஜனநாயகத்தின் உணர்வை மதிக்க வேண்டும். இதன் மூலம் ஒரு வளர்ச்சி அடைந்த இந்தியாவின் (விக்சித் பாரத்) அடித்தளத்தை வலுப்படுத்துவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து