Idhayam Matrimony

கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்: பிரேமலதா விஜயகாந்த் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2026      தமிழகம்
Pramalatha

திருச்செந்தூர், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் என்றும், தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் 2026 தேர்தல் நல்ல மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும் என்றும் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உள்ளம் தேடி, இல்லம் நாடி, மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரை நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி மாவட்டம் வந்துள்ளேன். கட்சி நிர்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்.

முருகன் அருளால் நல்ல மகத்தான கூட்டணி அமையும், அது எல்லோருக்கும் நிச்சயமாக நன்மை பயன் அளிக்கும் என்று கூறினார் விஜய் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது அவரிடம் அவர் கட்சியைப் பற்றி கேளுங்கள். என்னிடம் எங்கள் கட்சியைப் பற்றி கேளுங்கள் நான் சொல்கிறேன். மற்றவர்களைப் பற்றி கேட்கும்போது நான் எப்போதும் பதில் சொல்வதில்லை. 2026 தேர்தல் நிச்சயமாக தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் ஒரு மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும். நாங்கள் ஒரு நல்ல கூட்டணி அமைப்போம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து