முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி: கைப்பற்றிய பகுதிகளை திரும்பி தர ரஷ்யா மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2026      உலகம்
Putin 2024 08 11

அபுதாபி, அபுதாபியில் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலைியல் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யா திரும்பி தர மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போரானது 3 ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் எதிரொலியாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர்.

போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை ட்ரம்ப் முன்மொழிந்தார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான முதல் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் (ஜன.23) நடைபெற்றது. இதில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விடிய விடிய இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது பிராந்திய பிரச்சினைகளை தீர்க்காமல் நீண்ட கால தீர்வை எட்டமுடியாது. எனவே முழுமையாக கைப்பற்றப்படாத பகுதிகளில் நிறுத்தியுள்ள படைகளை உக்ரைன் திரும்ப பெற வேண்டும் என ரஷ்ய தரப்பு வலியுறுத்தியது. இதன்மூலம் போரில் கைப்பற்றிய பகுதிகளை திரும்ப ஒப்படைக்க முடியாது என்பதில் ரஷ்யா உறுதியாக உள்ளது. இதனால் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியில் நீடிக்கிறது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தில் கலந்து கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு இடையே உக்ரைன் தலைநகர் கீவ், காா்கிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ரஷ்யா சரமாரி வான்தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 31 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக முடிவடைந்ததாகவும், அடுத்த வாரம் மேலும் பல சாத்தியமான சூழல்கள் இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது பதிவில் தெரிவித்துள்ளார். இதனிடையே பேச்சுவார்த்தையாளர்கள் பிப்ரவரி 1-ம் தேதி அடுத்த சுற்றுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்புவார்கள் என்று ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து