முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் பயங்கரம்: மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2026      உலகம்
Suicide 2023 04 29

டாக்கா, வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதில் 9 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்துக்கள் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். குமில்லா மாவட்டம் லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சல் சந்திர பவுமிக்(வயது 23). இவர் நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். சஞ்சல் சந்திர பவுமிக் இரவு தான் வேலை பார்க்கும் இடத்தில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கும்பல் கடையின் ஷட்டரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியது. இதில் கடைக்குள் தீ பரவியதில் சஞ்சல் சந்திர பவுமிக் சிக்கி கொண்டார். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது சஞ்சல் சந்திர பவுமிக் தீயில் கருகி சடலமாக கிடந்தார். வாலிபரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதற்கு காரணமான வர்களை உடனடியாகக் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட் டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து