முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2026      இந்தியா
Murmu-1-2026-01-26

டெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா\ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

ஜூன் 2025 இல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற ஆக்ஸியம்-4 விண்வெளிப் பயணத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டது. இதனை அவரது மனைவி மருத்துவர் கம்னா சுக்லாபெருமிதத்துடன் கண்டு ரசித்தார்

சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். மேலும் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களில் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு இவர் இரண்டாவது வீரர் ஆவார். அண்மையில் உத்தரப் பிரதேச அரசால் 'உத்தரப் பிரதேச கௌரவ் சம்மான்' விருதும் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 

லக்னோவைச் சேர்ந்த ஷம்பு தயாள் மற்றும் ஆஷா தம்பதியினரின் 3-வது பிள்ளையாக ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் சுபான்ஷு சுக்லா. முன்னதாக ஒரு பேட்டியில், விண்வெளி வீரராக வேண்டும் என்பது உங்களது சிறுவயது கனவா என்று கேட்கப்பட்டபோது அதற்கு பதிலளித்த சுபான்ஷு சுக்லா, இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா 1984-இல் விண்வெளிக்குப் பயணம் செய்தார்; நான் 1985-இல் பிறந்தேன். 

அவர் விண்வெளிக்குச் சென்றபோது நான் பிறக்கவில்லை, ஆனால் அவருடைய கதைகளைக் கேட்டும், அவருடைய படங்களைப் பார்த்தும், விண்வெளியில் இருந்து அவர் அனுப்பிய செய்திகளைப் பாடப்புத்தகங்களில் படித்தும் நாங்கள் வளர்ந்தோம். அவருடைய பயணத்தால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன், ஆனால் ஒரு விண்வெளி வீரராக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அப்போது தோன்றவில்லை, ஏனெனில் அப்போது நம் நாட்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் இல்லை என்று தெரிவித்திருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து