முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, கிண்டியில் ரூ.417 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான மருத்துவமனை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: சென்னை கிண்டியில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்திற்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். 

கிண்டி, கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் 6.50 ஏக்கர் பரப்பளவில் 750 படுக்கைகளுடன் மருத்துவமனை அமைகிறது. இம்மருத்துவமனையில் 6 தளங்களுடன் கூடிய மருத்துவமனை கட்டடம், 3,37,990 சதுரஅடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் கூடிய முதுகலை பட்டதாரிகள் மற்றும் செவிலியர்கள் குடியிருப்பு கட்டிடம், 78,220 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் கூடிய பேராசிரியர்களுக்கான குடியிருப்பு கட்டிடம், 17,010 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் ஒரு தளத்துடன் கூடிய உணவகம் மற்றும் கூடுதல் வசதி கட்டிடம், 30,324 சதுர அடி பரப்பளவு என்று ஆக மொத்தம் 4,63,544 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டப்படவிருக்கிறது.

இந்த மருத்துவமனை உலகளவில் குழந்தைகளுக்காக உருவாக்கப்படுகின்ற பிரத்யேகமான ஒரு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, புற மருத்துவ பயனாளிகள் பிரிவு, குழந்தைகளுக்கான நாளமில்லா சுரப்பி வார்டு, நுரையீரல் சிகிச்சை வார்டு. டயாலிசிஸ் வார்டு, இருதய சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, எலும்பியல் சிகிச்சை பிரிவு, இரத்தவியல் பிரிவு, இரைப்பை குடல் அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு, ஒட்டுறுப்பு சிகிச்சை பிரிவு, ஆராய்ச்சி ஆய்வகம் என்று பல்வேறு வகைகளிலான சிறப்புமிக்க பிரிவுகள் இம்மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட உள்ளது. 

நிர்வாக அலுவலகம், இரத்த வங்கி காப்பகம், மயக்க மருந்தியல் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், கேத்லேப் ஆய்வகம், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, எலும்பு மஜ்சை மாற்று அறுவை சிகிச்சை பிரிவு என்று பல்வேறு வகைகளில் அதிநவீன மருத்துவ வசதிகள் இம்மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட உள்ளது. 18 மாத காலத்திற்குள் மருத்துவமனை கட்டிடப் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து