எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, உயிரிழந்த அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைக்கடிகாரம், ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்து உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.
விபத்தில் சிக்கிய விமானம் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. நேற்று காலை 8.45 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், விபத்து தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் தரையில் விழுந்து நொறுங்கி வெடித்து சிதறும் காட்சி அதில் பதிவாகி உள்ளது. இதற்கிடையே, உயிரிழந்த அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைக்கடிகாரம், ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்து உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


