எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு, நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக நேற்று பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றினார்.
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. வரும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது;- “நாட்டில் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதே அரசின் நோக்கம். அருணாசல பிரதேசம், திரிபுரா, மிசோரம் மாநில தலைநகரங்கள் அகல ரெயில் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மின் வாகன உற்பத்தியில் இந்தியா புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அசாமில் செமிகண்டக்டர் ஆலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விண்வெளி சுற்றுலா வெகு தூரத்தில் இல்லை. நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தியாவில் பொருளாதாரம் வலுவாக உள்ளது. உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.
மெட்ரோ கட்டமைப்பில் 3-வது பெரிய நாடாக இந்தியா மாறி இருக்கிறது. தமிழகத்தில் புதிய பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 350 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் உள்ள கிராமங்கள் நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சமூக பாதுகாப்பு திட்டங்கள் 25 கோடி குடிமக்களை மட்டுமே சென்றடைந்தன. அரசாங்கத்தின் முயற்சிகளால் தற்போது சுமார் 95 கோடி இந்தியர்கள் சமூக பாதுகாப்புத் திட்டங்களால் பயன் பெறுகின்றனர்.
25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மூலம் 12.5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் ஆண்டுகளில் 4 கோடி கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.
லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தில் நாடு முழுவதும் 2 கோடி பெண்கள் லட்சாதிபதியாக மாற்றி உள்ளனர். ஏழைக்களுக்காக தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 2.5 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். எதிரிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியாவின் வீரம் வெளிச்சம்போட்டு காட்டப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும். இடதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது இடதுசாரி பயங்கரவாதம் வெறும் 8 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடதுசாரி பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது. இந்தியாவில் விரைவில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும். கடந்தாண்டு 50 ஆயிரமாக இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தாண்டு 2 லட்சமாக உயர்ந்துள்ளது. 2 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் 2 லட்சம் நபர்களுக்க வேலை கிடைத்துள்ளது. உலகக்கோப்பைகளை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிகளுக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


