எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு எப்பொழுதும் தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதையொட்டி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நேற்று கூறியதாவது:-பட்ஜெட் கூட்டத்தொடர் மிகமிக முக்கியமானது. இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்.பி.க்கள் செயல்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறேன். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.
பாராளுமன்றத்தில் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் பெருமையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். உலகத்தின் நம்பிக்கையாக தற்போது இந்தியா வளர்ச்சி அடைந்து இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்களால் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை 140 கோடி இந்திய மக்களின் வெளிப்பாடாக அமைந்திருந்தது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கு அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிக முக்கியம். இளைய சமுதாயம், சேவை துறையினரை மனதில் வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
ஜி.எஸ்.டி. வருவாயில்1.65 லட்சம் கோடியை திரட்டி சாதனை படைத்திருக்கிறோம். 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம். நீண்ட கால பிரச்சனை என்ற நிலையில் இருந்து நீண்ட கால தீர்வு என்ற நிலையை நோக்கி இந்தியா பயணிக்கிறது. பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு நீண்ட கால வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


