முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் போட்டி?

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2026      அரசியல்
Nainar-Nagenthran

திருநெல்வேலி, என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க.வின் பட்டியலில் இடம்பெறும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இதன்மூலம் திருநெல்வேலி தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிடுவதை சூசகமாக குறிப்பிட்டுள்ளார். 

திருநெல்வேலி தச்சநல்லூரில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள புதிய உயர்மின் கோபுரத்தை திறந்து வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. தே.மு.தி.க. தனது நிலைப்பாட்டை வரும் 3-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்களுக்கு முதல்வர் புகைப்படத்தை போட்டு விளம்பரம் தேடி, தாங்கள் செய்வதைப் போல் சொல்லி வருகிறார்கள். தமிழகத்துக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், சாலைகள், பாலங்கள், ரயில்வே விமான நிலையங்கள் போன்றவை அமைப்பதற்கும் ரூ.14 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

ஆனால் மத்திய அரசு எதையும் தரவில்லை என்று தி.மு.க. கூறி வருகிறது. ஓ.பி.எஸ். கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். நல்லவர்கள் எல்லோரும் எங்களோடு தான் வருவார்கள். ஓ.பி.எஸ்.ஸும் நல்லவர்தான். இதுவரை கூட்டணியில் இணைவதற்கு ஓபிஎஸ்சிடம் எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

கடந்த 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021-ல் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். திருநெல்வேலி தொகுதி மக்கள் எனது உடன்பிறந்த சகோதரர்களை போன்றவர்கள். என்னை அவர்களின் வீட்டில் ஒரு பிள்ளையாக பார்க்கிறார்கள். எப்போதும் என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க.வின் பட்டியலில் இடம்பெறும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து