முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2026      தமிழகம்
Stalin 2024-11-26

சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- எளிமையின் உருவம் - விடுதலைப் போராட்ட வீரர் - முன்னாள் முதல்வர்  ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை உப்புச் சத்தியாகிரகம், சட்டமறுப்பு இயக்கம், தனிநபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு என இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழுமூச்சாக ஈடுபட்ட தலைசிறந்த காந்தியவாதியும், இந்தியா விடுதலையடைந்தபோது நம் மாநில முதலமைச்சராக இருந்த பெருமைக்குரியவருமான ஓமந்தூர் ராமசாமி ஐயா பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதிச் சாதனையாளராகத் தந்தை பெரியாராலும் பேரறிஞர் அண்ணாவாலும் போற்றப்பட்ட அவருக்குச் சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்வி வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து