முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தனபால் கோரிக்கை

திங்கட்கிழமை, 2 பெப்ரவரி 2026      இந்தியா
JAY

புதுடெல்லி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தனபால் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய தனபால், ‘‘தமிழ்நாட்டின் மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத் ரத்னா விருது வழங்கப்படுதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். நிர்வாகத் திறமையும் அரசியல் துணிவும் ஒருங்கே கோண்ட ஒரு தலைவராக மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தலைவராக அவர் திகழ்ந்தார். 

திரைத்துறையில் பணியாற்றிய ஜெயலலிதா, தமிழக முதல்வராக உயர்ந்தவர். அவர் மக்களின் நம்பிக்கையை பெற்று பல முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெண்கள், ஏழைகள், பிற்படுத்தப்பட்ட மக்களின் அன்பை பெற்றவராக அவர் இருந்தார். மக்களால் நான்; மக்களுக்காகவே நான் என்ற அவரது கொள்கை, அவரது அரசில் பிரதிபலித்தது.

தமிழகத்தில் அவர் செயல்படுத்திய பல்வேறு திட்டங்கள் மூலம் ஜெயலலிதாவின் நடவடிக்கை இந்திய சமூக நீதி அரசியலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.  சட்டம் ஒழுங்கு, நிர்வாக ஒழுங்கு, தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி ஆகியவற்றை பாதுகாப்பதில் தன்னிகரற்றவராக விளங்கினார். அவருக்கு பாரத் ரத்னா விருதை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். தனபால் பேச்சுக்கு இடையே குறுக்கிட்ட மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசிடம் நீங்கள் கேட்கலாமே என கூறினார். அதற்கு, மத்திய அரசுக்கு கோரிக்கையாகவே இதை தெரிவிக்கிறேன் என தனபால் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து