Idhayam Matrimony

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2,560 ரூபாய் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2026      தமிழகம்
Gold 2024-04-06

சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விறபனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில், தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,240-க்கும் விற்பனையானது.

இதனை தொடர்ந்து, நேற்று மாலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து விற்பனையானது. கிராமுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14.270-க்கும் சவரனுக்கு 1,920ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனையாது. மொத்தத்தில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 2,560 ரூபாய் உயர்ந்து விற்பனையானது.

தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து விற்பனையானது. காலையில் விலை குறைந்த நிலையில் தற்போது கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையானது.

கடைசி 5 நாட்கள் தங்கம் விலை:

1) 03-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,240.

2) 02-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600.

3) 01-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200.

4) 31-01-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200.

5) 30-01-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,800.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து