எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, பா.ஜ.க. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக தி.மு.க.வும், ஆட்சியை பிடிப்பதற்காக அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நாம் தமிழர் மற்றும் த.வெ.க.வும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லூர், விருகம்பாக்கம், உட்பட 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இந்நிலையில் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதாகவும், சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு வேறு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படுவார் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ‘என் தந்தையின் உடல்நலம் காரணமாக நான் கோவையில் இருக்கிறேன். அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேனா என தெரியவில்லை. அதற்கு காலம்தான் பதில் சொல்லும். இதன் காரணமாக, தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளின் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுகிறேன். இதைப்பற்றி எங்கள் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் சொல்லியுள்ளேன்’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


