Idhayam Matrimony

நாட்டை விற்றுவிட்டார்: பிரதமர் மீது ராகுல் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2026      இந்தியா
Rahul 2024-12-03

புதுடெல்லி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டார் என கூறினார்.

இது குறித்து பேசிய ராகுல் காந்தி, "மோடி ஜி கலக்கமடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த (அமெரிக்க-இந்தியா) வர்த்தக ஒப்பந்தத்தில் நரேந்திர மோடி கையெழுத்திட்டார். அவர் மீது கடுமையான அழுத்தம் உள்ளது. நரேந்திர மோடியின் பிம்பம் சேதமடையக்கூடும்.

முக்கிய விஷயம் என்னவென்றால், நமது பிரதமர் சமரசத்திற்கு உள்ளாகியுள்ளார். இதைப்பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும். முதல் முறையாக, குடியரசு தலைவர் உரை குறித்து பேச எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நரேந்திர மோடி ஜி சமரசத்திற்கு உள்ளாகியிருப்பதால், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் உங்கள் உழைப்பை விற்றுவிட்டார். அவர் நாட்டை விற்றுவிட்டார்."

நரேந்திர மோடி ஜி பயப்படுகிறார், ஏனென்றால் அவருடைய பிம்பத்தை உருவாக்கியவர்களே இப்போது அந்த பிம்பத்தை உடைக்கிறார்கள். அதானி ஜி மீது அமெரிக்காவில் ஒரு வழக்கு உள்ளது, அது உண்மையில் மோடி ஜி மீதான வழக்குதான். எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல விஷயங்கள் உள்ளன. அதன் காரணமாகவும் அழுத்தம் உள்ளது. இவைதான் அந்த இரண்டு அழுத்த புள்ளிகள். இதை நாடு புரிந்துகொள்ள வேண்டும்  என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து