எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாஸ்கோ, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், இரவு வானத்தில் 4 நிலவுகள் பிரகாசிப்பது போன்ற ஒரு காட்சியை கண்டு மக்கள் திகைத்துப் போனார்கள். இந்த அரிய காட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காணப்பட்டது. அதன் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வியக்க வைக்கும் காட்சி பாராசெலினே என்று அழைக்கப்படுகிறது, இது ‘மூன் டாக்’ அல்லது ‘மாக் மூன்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வானியல் நிகழ்வு அல்ல, மாறாக வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளியியல் மாற்றமாகும். பூமியின் வளிமண்டலத்தில் மிக உயரத்தில் உள்ள மேகங்களில் அறுகோண வடிவத்திலான சிறிய பனிப் படிகங்கள் இருக்கும்.
நிலவொளி இந்த பனிப் படிகங்கள் வழியாக ஊடுருவிச் செல்லும்போது, அந்தப் படிகங்கள் ஒரு சிறிய 'பிரிசம்' போலச் செயல்பட்டு ஒளியை வளைக்கின்றன. இவ்வாறு வளையும் ஒளியினால், உண்மையான நிலவிற்கு இருபுறமும் பிரகாசமான ஒளிப்புள்ளிகள் தோன்றுகின்றன. இது பார்ப்பதற்கு வானில் பல நிலவுகள் இருப்பது போன்ற மாயையை உருவாக்குகிறது.
இத்தகைய நிகழ்வுகள் ரஷ்யா போன்ற கடும் குளிர் நிலவும் பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தற்போது நிலவும் கடுமையான உறைபனி மற்றும் வளிமண்டல குளிர்ச்சி காரணமாக, மேகங்களில் பனிப் படிகங்கள் அதிகமாக உருவானதே இந்த நான்கு நிலவுகள் தோன்றக் காரணமாக அமைந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


