Idhayam Matrimony

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சியடையும்: விவசாயத்துறை செயலர்

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2026      உலகம்
Brooke-Rollins-2026-02-03

நியூயார்க். புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்கு அதிகப்படியான அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும். இதன் மூலம் அமெரிக்காவின் கிராமப்புற பொருளாதாரம் பெரும் வளர்ச்சியடையும் என்று அமெரிக்க விவசாயத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர். இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க விவசாயிகளுக்காக மீண்டும் ஒரு சிறப்புமிக்க ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் கொடுத்துள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை செயலாளர் புரூக் ரோலின்ஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வழியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்கு அதிகப்படியான அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும். இதன் மூலம் அமெரிக்காவின் கிராமப்புற பொருளாதாரம் பெரும் வளர்ச்சியடையும்.

2024 ஆம் ஆண்டில், இந்தியாவுடனான அமெரிக்காவின் விவசாய வர்த்தக பற்றாக்குறை 1.3 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள்தொகை அமெரிக்க விவசாய பொருட்களுக்கு ஒரு முக்கியமான சந்தையாகும், மேலும் இன்றைய ஒப்பந்தம் இந்தப் பற்றாக்குறை சரி செய்யப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து