எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் 89.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட அதிநவீன பால்பண்ணை, சென்னை, அம்பத்தூரில் 11.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் ஆகிய முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
மேலும், பால் உற்பத்தியாளர்கள், பால் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.1,000 மாதாந்திர கருணை ஓய்வூதியத்தினை வழங்கினார். ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9089 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்று அடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனம் தற்போது 3.47 லட்சம் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 37.92 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து 31 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் பால் கொள்முதல் செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
ஆவின் பால் பதப்படுத்துதல் திறன் அதிகரிக்கவும், விற்பனையை உயர்த்தவும், நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், லத்துவாடியில் 89.28 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட அதிநவீன பால்பண்ணையை முதல்வர் திறந்து வைத்தார். இதன்மூலம் சுமார் 310 கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்யப்படும்.
மேலும், 58,546 விவசாயிகளுக்கும், 504 மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கும் மற்றும் சுமார் 50 தளவாட வழங்குநர்களுக்கும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கும். இம்மாவட்டத்தில் சுமார் 1,22,360 விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, சுமார் 150 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் உருவாகும். பால் மற்றும் பால் பொருட்கள் தரத்தினை உயர்த்துவதற்கும், நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப புதிய பால் பொருட்கள் உற்பத்தி செய்யவதற்கான ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் சென்னை, அம்பத்தூரில் 11.57 கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தை அவர் திறந்து வைத்தார்.
பால் கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பிற்காகவும் பால் கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும் பால் கூட்டுறவுச் சங்கங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 2026 பிப்ரவரி மாதத்திலிருந்தும், தற்போது பணியாற்றி வரும் சங்கங்களின் பணியாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் மாதத்திலிருந்தும் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வழங்கும் மாதாந்திர கருணை ஓய்வூதியத் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக முதல்வர் 5 ஓய்வுபெற்ற சங்கப் பணியாளர்களுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கினார். இதன்மூலம் சங்கங்களிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற 2,335 பணியாளர்களும் தற்போது பணியில் உள்ள 13,042 பணியாளர்களும் பயன்பெறுவர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Feb 2026- சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்பம்.
- இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய நாள் எப்படி?
05 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
05 Feb 2026


