Idhayam Matrimony

த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மின்னஞ்சலில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 6 பெப்ரவரி 2026      அரசியல்
Vijay 2024-03-21

சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க த.வெ.க. தலைமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் இறங்குகிறது. ஆட்சியில் பங்கு என்ற அதிரடி அறிவிப்புடன் கூட்டணி கதவை திறந்து வைத்திருந்தாலும் இன்னும் த.வெ.க. கூட்டணிக்கு யாரும் வரவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் அதிருப்தி அடையும் கட்சிகள் த.வெ.க. பக்கம் திரும்பும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி வேகமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அதற்கு ஒருபடி மேலேபோய், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 10 அறிவிப்புகளை 2 கட்டங்களாக வெளியிட்டுவிட்டது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்கள் பரிந்துரைகளை தெரிவிக்க இணையதளம் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி tvkmanifesto2026.com என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான த.வெ.க.வின் இணையதளம் தொடங்கிய நிலையில் தற்போது முடங்கியுள்ளது. இதையடுத்து மின்னஞ்சல் வாயிலாக பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை தெரிவிக்கலாம் என த.வெ.க. அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து