முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான்: மசூதியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல் 31 பேர் பலி - பலர் படுகாயம்

வெள்ளிக்கிழமை, 6 பெப்ரவரி 2026      உலகம்
Pakistan-bom-2026-02-06

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பலியானார்கள் மேலும் இதில்  பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியில் உள்ள ஷியா மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது உடலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு வந்த நபர் ஒருவர், மசூதி வளாகத்திற்குள் நுழைய முயன்றார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், மசூதியில் இருந்தவர்கள் வாசல் அருகே அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர். சுமார் 169 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் தெஹ்ரிக்-இ-தலீபான் இயக்கத்துடன் தொடர்புடைய பிட்னா அல்-குவாராஜி அமைப்பிற்கு தொடர்பு இருக்கலாம் என பாகிஸ்தான் போலீசார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவ் 2 நாட்கள் அரசு முறைப்பயணமாக நேற்று பாகிஸ்தான் சென்றார். அவர் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து