Idhayam Matrimony

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்.. மேக் இந்தியா திட்டத்தை மேலும் வலுவாக்குகிறது: பிரதமர் மோடி..!

சனிக்கிழமை, 7 பெப்ரவரி 2026      இந்தியா
modi

டெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மேக் இந்தியா திட்டத்தை இது மேலும் வலுவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருவதைக் கண்டித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முதலில் 25 சதவிகித வரியையும் பின்னர் கூடுதலாக 25 சதவிகித அபராத வரியையும் விதித்திருந்தார். அதைத் தொடர்ந்து ரஷ்யாவின் எண்ணெய்யை வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதனால் இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை 18 சதவிகிதமாக குறைப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த திங்கள்கிழமை (பிப். 2) தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அதிபர் டிரம்ப் சனிக்கிழமை கையெழுத்திட்டார். அவரின் உத்தரவுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கு சிறப்பான செய்தி! நமது இரு நாடுகளுக்கு இடையே நாங்கள் இடைக்கால ஒப்பந்தம் செய்திருக்கிறோம். 

நமது நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் அர்ப்பணிப்புக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையையும், ஆழமான பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவில் சிறு, குறு விவசாயிகள், தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், மீனவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், மேக் இந்தியா திட்டம் வலுவாகிறது. இதனால், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து