எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“அண்மைக் காலத்தில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மோடி அரசாங்கம் தொழிலாளர் வர்க்கம் மீது அப்பட்டமான தாக்குதலை நடத்தி வருகிறது. தொழிலாளர்கள் 100 ஆண்டு காலமாக போராடிப் பெற்ற உரிமைகளை பறித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக 4 தொகுப்புச் சட்டங்களாக திருத்தியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொழிலாளர்கள் கொதித்தெழுந்து போராடி வருகின்றனர்.
இந்திய நாட்டின் வளங்களை சூறையாடி கார்ப்பரேட் மற்றும் பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் நரேந்திர மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலன்களை பாதுகாக்கவும் 12-ந்தேதியன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக்கிடும் வகையில் அனைத்து ஜனநாயக இயக்கங்களும், தமிழக உழைப்பாளி மக்களும், வணிகப் பெருமக்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12-ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசின் இந்த எதேச்சதிகாரத்தை முறியடிக்க இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் பிப்ரவரி 12 வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது, ஜனநாயக சக்திகள், முற்போக்கு அமைப்புகள், மத்திய அரசின் பாசிசத்தை எதிர்க்கக்கூடிய கட்சிகள் அனைத்திற்கும் கடமையாக இருக்கிறது.
பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்குவதுடன், நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் நலனை முன் நிறுத்தி நடைபெறும் இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழக மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தம்: வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு
09 Feb 2026சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், வி.சி.க.
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு
09 Feb 2026சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்து விற்பனையானது.
-
சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு: மாவட்ட செயலாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை
09 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் இன்று த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –09-02-2026
09 Feb 2026 -
தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு சென்ற ஜனநாயகன் திரைப்படம்..! விரைவில் தீர்வு கிடைக்க வாய்ப்பு
09 Feb 2026சென்னை, ஜனநாயகன் படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
-
குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி எதிரொலி: டி.என்.பி.எஸ்.சி. புதிய கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கடபிரியா நியமனம்
09 Feb 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி.
-
தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் சட்டசபை தேர்தலா..? பா.ஜ.க. நிர்வாகி சூசக தகவலால் பரபரப்பு
09 Feb 2026சென்னை, தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பா.ஜ.க. தேசிய அமைப்புச் செயலர் பி.எல்.
-
என்.சி.பி. மூத்த தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி
09 Feb 2026புனே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் நேற்று பிற்பகல் புனேவில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
பொது நிதிகள் குறித்து மக்களவைக்கு பிரதமர் அலுவலகம் முக்கிய உத்தரவு
09 Feb 2026புதுடெல்லி, பி.எம்.
-
நான் பேசுவதை கேட்டுத்தான் அவைக்கு வர பிரதமர் பயந்தார்: ராகுல் காந்தி விமர்சனம்
09 Feb 2026புதுடெல்லி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது மக்களவையில் நான் பேசியதை கண்டு பிரதமர் மோடி அவைக்கு வர பயந்தார் என்று ராகுல் காந்தி
-
20 வயது குறைந்திருக்கிறது: செங்கோட்டையன் பேச்சு
09 Feb 2026கோவை, எனக்கு இப்போது 20 வயது குறைந்திருக்கிறது. இளைஞராக ஓடுவதற்கு த.வெ.க. தலைவர் விஜய் என்னை தயார்படுத்தி இருக்கிறார் என்று கோவையில் நடந்த த.வெ.க.
-
பா.ம.க.-வின் தலைவர் அன்புமணிதான்: டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் உறுதிசெய்த தேர்தல் ஆணையம்
09 Feb 2026டெல்லி, பா.ம.க.வின் தலைவர் அன்புமணிதான் என்று டெல்லி நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி செய்த நிலையில், இந்த நடவடிக்கை ராமதாஸ் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் விரைவில் புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
09 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலையில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.
-
கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரம்: 13 மாவட்ட கலெக்டர்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
09 Feb 2026மதுரை, கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக 13 மாவட்ட கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
சரியான நேரத்தில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்போம் அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்
09 Feb 2026சென்னை, சரியான நேரம் வரும்போது தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைப்போம், பேச்சுவார்த்தையை ஸ்டாலின் சுமுகமாக முடிப்பார் என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.
-
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் பக்ரீத், ரம்ஜான் நாட்களில் மட்டும் தொழுகை நடத்துவதற்கு அனுமதி: ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
09 Feb 2026புதுடெல்லி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டும் தர்காவில் தொழுகை நடத்த அன


