முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.சி.பி. மூத்த தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி

திங்கட்கிழமை, 9 பெப்ரவரி 2026      இந்தியா
Sarathpawar 2023 07 03

புனே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் நேற்று பிற்பகல் புனேவில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டை தொடர்பான பிரச்சினைகள், இருமல் மற்றும் காய்ச்சல் நீண்ட நாட்களாக இருந்துவந்த நிலையில், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முதலில் பாராமதியில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புனேயில் உள்ள ரூபி ஹால் கிளினிக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். யாரும் பயப்பட வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவரது மகளும், எம்பியுமான சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் கூட வேண்டாம் என்று கட்சித் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற சடங்குகளில் சரத் பவார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து