எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பி.எம். கேர், பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி ஆகிய குறிப்பிட்ட மூன்று நிதிகள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப முடியாது என்று பிரதமர் அலுவலகம் மக்களவைச் செயலகத்திற்குத் தெரிவித்துள்ளது.
இதற்கு இவை அரசு நிதி அல்ல என விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்த நிதிகள் அனைத்தும் மக்களின் தன்னார்வப் பங்களிப்புகள் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், இவை இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து ஒதுக்கப்படுபவை அல்ல என்றும் கூறியுள்ளது. இதற்கு பிரதமர் அலுவலகம் இரண்டு விதிகளையும் மேற்கோள் காட்டியுள்ளது.
விதி 41(2)(viii): பாராளுமன்றக் கேள்விகள் இந்திய அரசின் நேரடிக் கவலைக்குரிய விஷயமாக இருக்க வேண்டும். விதி 41(2)(xvii): இந்திய அரசுக்கு நேரடியாகப் பொறுப்பில்லாத அமைப்புகள் அல்லது நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பக்கூடாது. என தெரிவித்துள்ளது.மேலும் இந்த நிதிகள் பொது தொண்டு அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வராது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமை எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. அதில், "பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகாலச் சூழ்நிலைகளில் நிவாரணம், பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி குறித்த கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்ப முடியாது. இந்த உத்தரவுகள் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்திலிருந்து நேரடியாக மக்களவை செயலகத்திற்கு வந்துள்ளன. இதன்மூலம் இந்த நிதிகள் குறித்து கேள்விகள் கேட்க வேண்டாம் என்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பல தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், அப்படியிருக்கையில் பொதுநலன் சார்ந்த கேள்விகளைக் கேட்பதிலிருந்து அவர்கள் ஏன் தடுக்கப்படுகிறார்கள்? மோடி அரசு ஏன் பொறுப்புக்கூறலுக்கு அஞ்சுகிறது? ஆயிரக்கணக்கான கோடி பொதுப் பணம் குறித்த கேள்விகளை ஏன் முடக்க வேண்டும்? மக்களிடமிருந்து அரசு எதைமறைக்க முயல்கிறது? இனி பாராளுமன்றம் அரசியலமைப்பின்படி செயல்படுமா அல்லது மோடியின் உத்தரவுகளின்படி செயல்படுமா? இது வெளிப்படைத்தன்மை அல்ல. இது சர்வாதிகாரக் கட்டுப்பாடு. இது பாராளுமன்றத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதல். " எனக் குறிப்பிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு
09 Feb 2026சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்து விற்பனையானது.
-
மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தம்: வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு
09 Feb 2026சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், வி.சி.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –09-02-2026
09 Feb 2026 -
குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி எதிரொலி: டி.என்.பி.எஸ்.சி. புதிய கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கடபிரியா நியமனம்
09 Feb 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி.
-
சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு: மாவட்ட செயலாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை
09 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் இன்று த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
-
தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் சட்டசபை தேர்தலா..? பா.ஜ.க. நிர்வாகி சூசக தகவலால் பரபரப்பு
09 Feb 2026சென்னை, தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பா.ஜ.க. தேசிய அமைப்புச் செயலர் பி.எல்.
-
பொது நிதிகள் குறித்து மக்களவைக்கு பிரதமர் அலுவலகம் முக்கிய உத்தரவு
09 Feb 2026புதுடெல்லி, பி.எம்.
-
தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு சென்ற ஜனநாயகன் திரைப்படம்..! விரைவில் தீர்வு கிடைக்க வாய்ப்பு
09 Feb 2026சென்னை, ஜனநாயகன் படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
-
நான் பேசுவதை கேட்டுத்தான் அவைக்கு வர பிரதமர் பயந்தார்: ராகுல் காந்தி விமர்சனம்
09 Feb 2026புதுடெல்லி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது மக்களவையில் நான் பேசியதை கண்டு பிரதமர் மோடி அவைக்கு வர பயந்தார் என்று ராகுல் காந்தி
-
என்.சி.பி. மூத்த தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி
09 Feb 2026புனே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் நேற்று பிற்பகல் புனேவில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் விரைவில் புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
09 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலையில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.
-
20 வயது குறைந்திருக்கிறது: செங்கோட்டையன் பேச்சு
09 Feb 2026கோவை, எனக்கு இப்போது 20 வயது குறைந்திருக்கிறது. இளைஞராக ஓடுவதற்கு த.வெ.க. தலைவர் விஜய் என்னை தயார்படுத்தி இருக்கிறார் என்று கோவையில் நடந்த த.வெ.க.
-
கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரம்: 13 மாவட்ட கலெக்டர்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
09 Feb 2026மதுரை, கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக 13 மாவட்ட கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
சரியான நேரத்தில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்போம் அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்
09 Feb 2026சென்னை, சரியான நேரம் வரும்போது தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைப்போம், பேச்சுவார்த்தையை ஸ்டாலின் சுமுகமாக முடிப்பார் என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.
-
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் பக்ரீத், ரம்ஜான் நாட்களில் மட்டும் தொழுகை நடத்துவதற்கு அனுமதி: ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
09 Feb 2026புதுடெல்லி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டும் தர்காவில் தொழுகை நடத்த அன
-
பா.ம.க.-வின் தலைவர் அன்புமணிதான்: டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் உறுதிசெய்த தேர்தல் ஆணையம்
09 Feb 2026டெல்லி, பா.ம.க.வின் தலைவர் அன்புமணிதான் என்று டெல்லி நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி செய்த நிலையில், இந்த நடவடிக்கை ராமதாஸ் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


