முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் பேசுவதை கேட்டுத்தான் அவைக்கு வர பிரதமர் பயந்தார்: ராகுல் காந்தி விமர்சனம்

திங்கட்கிழமை, 9 பெப்ரவரி 2026      இந்தியா
Rahul 2025-07-29

புதுடெல்லி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது மக்களவையில் நான் பேசியதை கண்டு பிரதமர் மோடி அவைக்கு வர பயந்தார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது சீன விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசத் தொடங்கினார். இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மக்களவையில் அவரை பேசவிடாமல் தடுத்தனர்.

இதற்கிடையே மக்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்கத் திட்டமிட்டிருந்தபோது, சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு "முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை" செய்யத் திட்டமிட்டிருந்ததாக தமக்குத் தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். 

இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரைச் சபைக்கு வர வேண்டாம் என்று தாமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் மக்களவையில் பிரதமர் மோடி இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி கூறுகையில் "பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் மிரட்டல் என்ற கேள்விக்குகே இடமில்லை. உண்மை என்னவென்றால் மக்களவையில் நான் பேசியதை கண்டு பிரதமர் மோடி அவைக்கு வர பயந்தார்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து