எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டும் தர்காவில் தொழுகை நடத்த அனுமதி என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் தொழுகை நடத்துவது மற்றும் பலியிடுவது தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில், நீதிபதி நிஷா பானு, முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதியான எஸ். ஸ்ரீமதி, மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். ரம்ஜான், பக்ரீத் மற்றும் பிற இஸ்லாமிய பண்டிகைகளின்போது கந்தூரி பலியிடுவது மற்றும் தொழுகை நடத்துவது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தினார்.
மேலும், தர்காவில் தொழுகை நடத்துவது சமீபத்தில் தோன்றியது என்று கூறிய அவர், தொழுகைக்காக அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவது காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் பாதையைத் தடுக்கும் என்றும், அது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் மற்ற பகுதிகளை ஆக்கிரமிக்கும் என்றும் கூறினார். இரு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்புகளை அளித்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இறுதித் தீர்ப்புக்காக இந்த வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பினார்.
வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி, கடந்த ஆண்டு அக்டோபர் 10 அன்று அளித்த தீர்ப்பில், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின்போது மட்டுமே தொழுகை நடத்த வரையறுக்கப்பட்ட உரிமைகள் உள்ளன என்று தீர்ப்பளித்தார். மேலும், குன்றில் பலியிடும் வழக்கம் குறித்து ஒரு தகுதிவாய்ந்த உரிமையியல் நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, எந்த ஒரு பலியிடுதல், சமைத்தல், அசைவ உணவைக் கொண்டு செல்வது, பரிமாறுவது ஆகியவற்றுக்கு தடை விதித்தார்.
இதனால், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தர்காவில் வழிபடும் எம்.இமாம் உசேன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி.பி வரலே அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘‘தர்கா உள்ள நெல்லித்தோப்பு பகுதி நிலம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்று கூறிய பிறகு, தொழுகை நடத்த கட்டுப்பாடு விதிப்பதா?
தொழுகை நடத்துவதால் அந்த பகுதியில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வந்தது கிடையாது’’ என்று வாதிட்டார். அப்போது நீதிபதி அரவிந்த் குமார், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை இருந்திருக்கவில்லை என்றால் அமைதிக் குழு கூட்டம் நடந்திருக்காது என்றும், உயர் நீதிமன்ற உத்தரவு சமநிலையான உத்தரவாகத் தெரிகிறது என்றும் கூறினார். மற்றொரு நீதிபதியான பி.பி.வரலே அதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ‘‘இந்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது’’ என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தம்: வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு
09 Feb 2026சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், வி.சி.க.
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு
09 Feb 2026சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –09-02-2026
09 Feb 2026 -
குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி எதிரொலி: டி.என்.பி.எஸ்.சி. புதிய கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கடபிரியா நியமனம்
09 Feb 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி.
-
சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு: மாவட்ட செயலாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை
09 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் இன்று த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
-
தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் சட்டசபை தேர்தலா..? பா.ஜ.க. நிர்வாகி சூசக தகவலால் பரபரப்பு
09 Feb 2026சென்னை, தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பா.ஜ.க. தேசிய அமைப்புச் செயலர் பி.எல்.
-
பொது நிதிகள் குறித்து மக்களவைக்கு பிரதமர் அலுவலகம் முக்கிய உத்தரவு
09 Feb 2026புதுடெல்லி, பி.எம்.
-
தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு சென்ற ஜனநாயகன் திரைப்படம்..! விரைவில் தீர்வு கிடைக்க வாய்ப்பு
09 Feb 2026சென்னை, ஜனநாயகன் படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
-
நான் பேசுவதை கேட்டுத்தான் அவைக்கு வர பிரதமர் பயந்தார்: ராகுல் காந்தி விமர்சனம்
09 Feb 2026புதுடெல்லி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது மக்களவையில் நான் பேசியதை கண்டு பிரதமர் மோடி அவைக்கு வர பயந்தார் என்று ராகுல் காந்தி
-
என்.சி.பி. மூத்த தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி
09 Feb 2026புனே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் நேற்று பிற்பகல் புனேவில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் விரைவில் புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
09 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலையில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.
-
கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரம்: 13 மாவட்ட கலெக்டர்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
09 Feb 2026மதுரை, கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக 13 மாவட்ட கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
20 வயது குறைந்திருக்கிறது: செங்கோட்டையன் பேச்சு
09 Feb 2026கோவை, எனக்கு இப்போது 20 வயது குறைந்திருக்கிறது. இளைஞராக ஓடுவதற்கு த.வெ.க. தலைவர் விஜய் என்னை தயார்படுத்தி இருக்கிறார் என்று கோவையில் நடந்த த.வெ.க.
-
சரியான நேரத்தில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்போம் அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்
09 Feb 2026சென்னை, சரியான நேரம் வரும்போது தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைப்போம், பேச்சுவார்த்தையை ஸ்டாலின் சுமுகமாக முடிப்பார் என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.
-
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் பக்ரீத், ரம்ஜான் நாட்களில் மட்டும் தொழுகை நடத்துவதற்கு அனுமதி: ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
09 Feb 2026புதுடெல்லி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டும் தர்காவில் தொழுகை நடத்த அன
-
பா.ம.க.-வின் தலைவர் அன்புமணிதான்: டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் உறுதிசெய்த தேர்தல் ஆணையம்
09 Feb 2026டெல்லி, பா.ம.க.வின் தலைவர் அன்புமணிதான் என்று டெல்லி நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி செய்த நிலையில், இந்த நடவடிக்கை ராமதாஸ் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


