எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை கடந்த ஆண்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இதுபோன்று அவர் கூறுவது 80 வது முறை.
வரி விதிப்பின் மூலம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்தாவிட்டால், அணு ஆயுதப் போராக அது மாறியிருக்கும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த வணிக செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ட்ரம்ப், இதுவரை 8 போர்களை தலையிட்டு நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதில் 6 போர்கள் வரி விதிப்பின் மூலம் சாத்தியமாகியுள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பாக ட்ரம்ப் பேசியதாவது: ''உலகில் இதுவரை 8 போர்களை நிறுத்தியுள்ளேன். நீங்கள் போர்களை நிறுத்தாவிட்டால், வரி விதிப்பை அதிகரிப்பேன். ஏனெனில் மக்கள் கொல்லப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது'' எனக் குறிப்பிட்டார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் குறித்துப் பேசிய ட்ரம்ப், ''இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் எல்லை மீறி இருந்தது. என் கருத்துப்படி, இது அணு ஆயுதப் போராகவும் மாறியிருக்கும். போரில் கிட்டத்தட்ட 10 விமானங்கள் தகர்க்கப்பட்டன. இந்தப் போரை நிறுத்தியதில் வரி விதிப்பு முக்கியப் பங்காற்றியது. இந்தப் போரை நிறுத்தியதன் மூலம் ஒரு கோடி உயிர்களைத் தான் காப்பாற்றியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் என்னிடம் கூறினார். அவருக்கு நான் பதிலளித்தேன்'' என ட்ரம்ப் குறிப்பிட்டார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள மூன்று அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை 80 முறை பல்வேறு இடங்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில், மூன்றாவது நபரின் தலையீடு இல்லை என இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


