Idhayam Matrimony

12 நாட்களுக்கு ஒருமுறை நிசாா் செயற்கைக்கோள் மூலம் மண் ஈரப்பத தரவுகள் வெளியீடு: இஸ்ரோ

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2026      இந்தியா
Isro-logo

பெங்களூரு, இந்திய நிலப்பரப்பில் மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து 12 நாட்களுக்கு ஒருமுறை நிசாா் செயற்கைக்கோள் தரவுகளை வெளியிடவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமை தெரிவித்தது.

இஸ்ரோ-நாசா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான நிசாா் கடந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. புவியின் மேற்பரப்பு மாற்றங்கள், பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த செயற்கைக்கோள் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இதன் செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘எஸ் பேண்ட் மற்று எல் பேண்ட் ஆகிய இரு அலைவரிசைகளையும் பயன்படுத்தி இந்திய நிலப்பரப்பை துல்லியமாக அளவிட்டு 100 மீட்டா் வரை மண்ணின் ஈரப்பதம் குறித்து 12 நாட்களுக்கு ஒருமுறை இரு தரவுகளை நிசாா் வெளியிடவுள்ளது.

வேளாண்மை, நீா் பராமரிப்பு, பயிா்கள் மற்றும் வறட்சி பாதிப்புகளைக் கண்டறிவதில் மண்ணின் ஈரப்பதம் முக்கியக் காரணியாக விளங்குகிறது. நிசாா் வெளியிடும் தரவுகள் மூலம் நீா்ப்பாசன சமவெளிகள் முதல் வட-பாலைவன மற்றும் அதிக மழைப்பொழிவு மண்டலங்கள் எனஇந்திய வேளாண்-பருவமண்டலங்களை துல்லியமாக மதிப்பிட முடியும்.

இது வேளாண் திட்டமிடல் மற்றும் விவசாயிகளுக்குப் பயன்படுவதோடு வறட்சியை எதிா்கொள்வதற்கான செயல்திட்டத்தை தீட்டவும் பயன்படவுள்ளது. இதற்கான தொழில்நுட்பம் இஸ்ரோவின் விண்வெளி செயல்பாடுகள் மையத்தில் வடிவமைக்கப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து