Idhayam Matrimony

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2026      தமிழகம்
EPS 2023 03 27

ஈரோட்டு, தினமும் தி.மு.க. காங்கிரஸ் வார்த்தைப்போர் நடக்கிறது என்றும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது சந்தேகம் என்றும் ஈரோட்டில் நடந்த பிரச்சாரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ தேர்தல் சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று 182வது தொகுதியாக ஈரோடு மாவட்டம், பவானிசாகர் (தனி) தொகுதிக்குட்பட்ட, சத்தியமங்கலம் சாலை அரியாப்பம்பாளையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி,  தமிழக வரலாற்றிலே பொய் பேசி விளம்பரத்தை நம்பி ஆட்சி நடத்தும் முதல்வர் உண்டு என்றால், அது ஸ்டாலின் தான். தினமும் தி.மு.க. காங்கிரஸ் வார்த்தைப்போர் நடக்கிறது. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி இருக்குமா என்பது சந்தேகம். ஆட்சியில் பங்கு வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். இப்போது கூட உரிய மரியாதை கிடைக்காவிட்டால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று காங்கிரஸ் எம்பி சொல்கிறார். கூட்டணி நிலைக்குமா தெரியவில்லை. 

இன்னொரு பக்கம் திருமா ஆட்சியில் பங்கு கேட்கிறார். கூட்டணியில் குழப்பம். அ.தி.மு.க. கூட்டணி வலிமையானது. பிரதமர் மதுராந்தகம் வந்து பிரச்சாரம் செய்தார், எங்கள் தேர்தல் பிரச்சாரம் துவங்கிவிட்டது. அ.தி.மு.க. தான் 181 இடத்தில் எழுச்சிப் பயணம் முடித்து 182வது தொகுதியில் பேசுகிறேன். இதுவரை எந்த கட்சியும் இப்படி செய்ததில்லை. நேரடியாக மக்களை சந்திப்பதில் முதல் இடத்தில் இருப்பது அ.தி.மு.க. கூட்டணி. 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. தங்கம் வெள்ளி விலை நிலவரம் போல கொலை நிலவரம் என்றுதான் வருகிறது, இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா..?

அ.தி.மு.க. ஆட்சியில் பாலியல் வன்கொடுமை நடந்ததாக முதல்வர் பேசுகிறார், உங்கள் ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். 6999 சிறுமிகளும் அப்பா என்று கதறுவது உங்கள் காதில் விழவில்லையா? மோசமான ஆட்சி இது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பாட்டிக்கும் பாதுகாப்பில்லை.

இதைக் கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கு நிரந்தர டிஜிபி இதுவரை நியமிக்கவில்லை. 3 மாதம் முன்பே யுபிஎஸ்சிக்கு அனுப்பி மூவரை பரிந்துரைப்புவார்கள் அதில் ஒருவரை நியமிக்க வேண்டும். ஏற்கனவே மூவரை அனுப்பியது யுபிஎஸ்சி, ஆனால் தமிழக அரசு நியமிக்கவில்லை. நீதிமன்றம் சென்றுவிட்டது. இப்படிப்பட்ட கேவலமான முதல்வர் ஆள்கிறார். காவலர்களுக்கே பாதுகாப்பில்லை. குற்றவாளி போலீஸை எகிறி அடிக்கிறான். 

தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 23 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். அந்த பணத்தை எடுத்துத்தான் இந்த தேர்தலில் வாக்காளரை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள். உஷாராக இருங்கள். நாங்கள் திட்டங்களைக் கொடுத்து மக்களை சந்திக்கிறோம் தி.மு.க.விடம் சொல்ல எதுவுமில்லை செய்தால்தானே சொல்வதற்கு? 

 

இன்று உதயநிதி அவ்வப்போது அ.தி.மு.க. பற்றி அவதூறு பரப்புகிறார். இரவினில் ஆட்டம் பகலில் தூக்கம் இதுதான் துணை முதல்வர் உலகம். பகலில் நாட்டு மக்களை  பார்க்காதவர், இன்ஸ்டாவில் நள்ளிரவில் லைக் போடுகிறார். இப்படிப்பட்ட துணை முதல்வர் தேவையா..?  இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து