எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது தில்லி, நவ. 14: தொலைத் தொடா்புத் துறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மற்றொரு ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் யஷ்வந்த் சின்ஹா பிரதமா் மன்மோகன்சிங்க்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடா்பாக அவா் பிரதமருக்கு செவ்வாய்கிழமை அனுப்பியுள்ள கடிதம்: அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான அடிப்படை விலையை மிகவும் குறைத்து மத்திய தொலைத்தொடா்பு ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 1,800 மெகா ஹொ்ட்ஸ் அளவுக்கான ஒதுக்கீட்டில், ஒரு மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றையின் விலை ரூ.2,376கோடியில் இருந்து ரூ.1,496 கோடி சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.மும்பை, தில்லி போன்ற முக்கிய தொலைத்தொடா்பு வட்டங்களில் இந்த விலை சுமார் 50 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அலைக்கற்றை விலை தொடா்பாக தொலைத்தொடா்பு ஆணையம் அளித்துள்ள பரிந்துரையில் பெருநகரங்களில் சுமார் 25 சதவீதமும், "ஏ" (1,800 மெகா ஹொ்ட்ஸ்) மற்றும் "பி" (900 மெகா ஹொ்ட்ஸ்) பிரிவு தொலைத்தொடா்பு வட்டங்களுக்கு குறைவாகவும் விலைநிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை காலத்தில் அலைக்கற்றையை ஏலத்தில் விட்டால் அரசுக்கு ரூ.35ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இந்த நடவடிக்கையால் தனியார் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் லாபம் கொழிக்கும். எனவே, முறையாக நடைபெறாத ஏலத்துக்கு தொலைத்தொடா்புவளா்ச்சியின்மையைத காரணமாகக் கூடாது. வளா்ந்து வரும் தொலைத்தொடா்புத் துறையில் மீண்டும் தனியார் நிறுவனங்கள் லாபம் கொழிக்க அனுமதிக் கூடாது. அது இன்னொரு ஊழலுக்கான வாய்ப்பாக அமைந்து விடும். எனவே, விவகாரத்தில் பிரதமா் உடனடியாக தலையிட வேண்டும். அலைக்கற்றையின் பொருளாதார மதிப்பை உணா்ந்து, அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்ய வேண்டும் என்று கடிதத்தில் யஷ்வந்த் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


